புதன், 27 அக்டோபர், 2010

பராமரிப்பற்ற நிலையில் திப்புவின் பீரங்கி!...


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தியாகதுருகம் மலை மீது மாவீரன் திப்புசுல்தான் கட்டிய கோட்டைகளும், பிரம்மாண்டமான 3 பீரங்கிகளும் சுற்றுச் சுவர்களும் இன்றும் நிலைத்து உள்ளன. அதைச் சுற்றியுள்ள 15 கிராமங்கள் இன்றும் வரலாற்று பெருமையை உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. மலையிலிருந்த 9 அடி நீளம், 2 டன் எடையுள்ள பீரங்கியும் மற்றும் உடைந்த பீரங்கியின் துண்டு களும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு கொண்டுபோகப் பட்டுள்ளது.

மேலும் சங்கராபுரத்தை அடுத்த ராவுத்தர் நல்லூர் கிராமத்தில் உள்ள சக்தி மலையில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் நவாப்ஜான் என்ற முஸ்லிம் மன்னர் ஆண்டு வந்ததாக வரலாறு உள்ளது. இவர் பயன்படுத்திய தளவா டங்கள், ஆயுதங்கள் அப்படியே உள்ளன. இதைச் சுற்றுலா வரும் பயணிகள் பார்ப்பது வழக்கம். இம்மன்ன னின் பீரங்கி சுமார் 40 ஆண்டுகளாக அரசம்பட்டு என்ற கிராமத்தில் குருமூர்த்தி என்பவரிடம் இருந்தது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜ் அவர்கள் வரலாற்று சின்னங்களை பார்ப்பதிலும், அதுதொடர்பான தகவல்களை அறிவதி லும் ஆர்வம் உள்ளவர் என்று சொல் கிறார். அந்த பீரங்கிகளை பார்த்து அவர் ரொம்பவும் வருத்தப்பட்டாராம். அதனால் இரு கோட்டைகளில் உள்ள பீரங்கிகளை யும் எடுத்து வந்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்துள்ளாராம்.

ஆனால் இந்த கோட்டைகளும், பீரங் கிகளும் முஸ்லிம் மன்னர்கள் காலத்தை சார்ந்தவை, அவர்கள் பயன்படுத்தியவை என்பது மேற்படி பத்திரிகை மூலமாக நன்கு புலனாகிறது. ஆகவே ஆர்வம் உள்ள விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அந்த பீரங்கிகளை மக்கள் பார்க்கும் அந்தந்த கோட்டை களில் வைத்து பராமரித்து, பாதுகாத்து, காண வரும் பொதுமக்களுக்கு பார்வை யிட அனுமதித்தால்தானே அந்த பீரங்கியின் வரலாறும், கோட்டையின் வரலாறும், அவற்றின் பெருமையும் தெரியும்.

மேலும், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள கோட்டை களும், பீரங்கிகளும் சரித்திர காலத்தவை ஆகும். ஆகையால் இந்த பீரங்கிகளை தொல்பொருள் இலாகாவிடம் ஒப்ப டைக்க வேண்டும். மாவட்ட தொல் பொருள் இலாகாவிடம் தந்து வைத்தால் அதன் வரலாறு புரியும்படி எழுதிவைப் பார்கள். அதைவிட்டு விட்டு கோட்டை களை பார்க்க வருபவர்கள் அந்த இரண்டு பீரங்கிகளை மட்டும் பார்க்க விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு போவார்களா? அவர்களுக்கு அங்கு பீரங்கிகள் இருப்பது தெரியுமா? காவல்துறை அலுவலகம் உள்ளே எப்பொழுது வேண்டுமானாலும் போய் பார்க்க அனுமதிப்பார்களா? மக்கள் காவல்துறை அலுவலகம் என்றாலே போக பயப் படுவார்கள். மேலும் அங்கு வைக்கப் படும் பீரங்கிகளின் வரலாறும் காலப் போக்கில் மறைய வாய்ப்புள்ளது. காவல் நிலையத்தில் கொண்டுபோய் வைத்தால் இந்த பீரங்கி இந்த மன்னருடையது என்று யாரும் சொல்லமாட்டார்கள். காவல்துறையில் உள்ள சங்பரிவாரங்கள், வரலாற்றை மாற்றிட பீரங்கிகளை அழித்துவிடுவார்கள். மேலும் முஸ்லிம் மன்னர்களின் வரலாறும் அழிக்கப்பட்டு, மறக்கடிக்கப்படும்.

ஆகவே, எடுத்துவந்த பீரங்கிகளை இருந்த கோட்டைகளில் வைத்து பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தொல்பொருள் இலாகாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக