புதன், 27 அக்டோபர், 2010

டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் எழிலுறுமா?


டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜும்ஆ மஸ்ஜித் முகலாய மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்டதாகும். ஒன்றரை லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் தொழுகை நிறைவேற்றும் வண்ணம். மிகப் பிரம்மாண்டமாகவும் எழிலுறவும் அமைக்கப்பட்டுள்ள டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை மன்னர் ஷாஜகான் தனது அரச மண்டபமான டெல்லி செங்கோட்டையில் இருந்து பார்க்கும் வண்ணம் அமைத்தார்.
ஆனால், காலங்கள் செல்ல செல்ல அதிகமாக கடைகள் முளைத்தன. இந்நிலையில் டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகுபடுத்த 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி வரலாற்று சிறப்பு மிக்க டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகுபடுத்த வேண்டும்.

2008 மே 18ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதையும், சுற்றியுள்ள பகுதிகளையும் அழகுபடுத்த வேண்டும் என்று 2006 அக்டோபர் மாதம் நீதிமன்றம் டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. ஆனால், இது தொடர்பான எவ்வித நடவடிக்கையும் இன்னும் தொடங்கப்படவில்லை.

டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகு படுத்தும் பணியில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள விஜய்சிங் இந்த திட்டத்தினை மீண்டும் திருத்தி வரைவு செய்வதாக அறிவித்திருக்கிறார்.

1979லில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவின்படி ஜும்ஆ மஸ்ஜிதைச் சுற்றியும் பள்ளிவாசல் வளாகங்கள் விரிந்திருந்தன என்ற உண்மை வெளியானது. இந்நிலையில் டெல்லி மஸ்ஜிதின் பாரம்பரிய அழகைக் கெடுக்கும் வண்ணம் பல்முனை வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய பெருமை மிக்க டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதின் எழில் மீண்டும் மீட்கப்படுமா என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக