வெள்ளி, 29 அக்டோபர், 2010

ஆர்எஸ்எஸ் நடவடிக்கையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: காங்கிரஸ்

டெல்லி,அக்.29:அஜ்மீர் குண்டுவெடிப்பு விசாரணையில் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு போலீசார் கண்டுபிடித்த தகவல்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடைசெய்ய பொருத்தமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்தார். எனினும் ஆர்எஸ்எஸ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது அவசியம் அல்லது அவசியமில்லை என்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என்றார் அவர்....

பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளுக்கு இடும் பெயர்களில் 'முஹம்மது' என்ற பெயர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது

லண்டன்,அக்.29:பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளுக்கு இடும் பெயர்களில் 'முஹம்மது' என்ற பெயர் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

டெய்லி மெய்ல், 28 அக்டோபர் 2010 ல் வெளியான செய்தி:
பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளுக்கு இடும் பெயர்களில் 'முஹம்மது' என்ற பெயர் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

கடந்த 2008-ம் வருடத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்த பெயர் 2009 ல் அதுவரை முதன்மையாக இருந்து வந்த 'ஜாக்' மற்றும் 'ஹாரி' போன்ற பெயர்களை புறந்தள்ளிவிட்டு முதலாவது இடத்திற்கு உயர்ந்திருக்கின்றது.

2009ல் பிறந்த குழந்தைகளில் 7549 குழந்தைகளுக்கு இறைத்தூதரான 'முஹம்மது' (ஸல்) அவர்களின் பெயர் இடப்பட்டுள்ளது.

வியாழன், 28 அக்டோபர், 2010

கஷ்மீர் மக்களின் சுதந்திர விருப்பத்தைப் பற்றி கருத்தரங்கில் பேசிய அருந்ததி ராய் கருத்துக்கு முழு ஆதரவு: திருமாவளவன்

சென்னை,அக்.28:காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று அருந்ததி ராய் பேசியதை முழுமையாக ஆதரிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
"காஷ்மீர் குறித்த பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் கருத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியவை. பா.ஜ.க.வை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை. அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகிறார்கள் என்பதே உண்மை.

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவில் ஒருவராக நான் காஷ்மீர் சென்றிருந்தேன். 'இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும்' என்று எங்களிடம் அந்த மாநில மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அருந்ததி ராய் பேசியதாகக் கூறப்படும் செய்திகளில் எந்தத் தவறும், தேச விரோதமும் இருப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீர் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதனைத் தான் அவர் பேசியுள்ளார்.

மேலும் யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மவுனத்தை உடைத்த அருந்ததி ராயை நான் பாராட்டுகிறேன்.

அருந்ததிராய்க்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம். ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து, பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும்." என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய வங்கி முறை:ரிசர்வ் வங்கிக்கு மன்மோகன் பரிந்துரை

கோலாலம்பூர்,அக்.28:இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.

மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வங்கிச் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை இதுகுறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மலேசியாவில் இது எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வங்கிச் சேவை என்பது வட்டியில்லாமல் வங்கிச் சேவை அளிப்பதாகும். இத்தகைய சேவை தொடங்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 500 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் புழங்கும் தொகை 1 லட்சம் கோடி டாலராகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 4 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்தாலும், நீதிமன்றங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பது சந்தேகமே. இஸ்லாமிய வங்கி போன்ற வட்டியற்ற வங்கிச் சேவையை மாநில அரசு ஆதரிக்கக் கூடாது என்று சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 27 அக்டோபர், 2010

அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?

முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்


நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா? மதச்சார்பற்ற குடியரசு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அரசு வங்கிகள்  முஸ்லீம்களுக்கு எதிராக இத்தகைய புறக்கணிப்பை அமலாக்கி வருகின்றன.
கல்வி உதவித் தொகை பெறும் பொருட்டு  சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு விண்ணப்பித்த 90,000 முஸ்லீம் மாணவர்களுடைய விண்ணப்பங்கள் ஆந்திராவில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பீஹாரில் வங்கிகள் மறுத்ததால்  50,000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் அரசின் உதவித் தொகையை இழந்துள்ளனர். அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., கர்நாடகா என நாடு முழுவதிலும் முஸ்லீம் மாணவர்கள் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர். அரசு வங்கிகளில் கடன் பெறுவது மட்டுமின்றி கணக்குத் தொடங்குவதும்கூட முஸ்லீம்களுக்கு இயலாததாகிவிட்டது என்ற புகாரை தேசிய சிறுபான்மை கமிசன் விசாரிக்கப் புகுந்தபோதுதான், முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் பலவற்றை “அபாயகரமான பகுதிகள்” (Red Zones) என்று அரசு வங்கிகளே ஒதுக்கி வைத்திருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது.
நகரங்களில் மற்ற பிரிவினருடன் கலந்து வாழமுடியாமல் ஒதுக்கப்படுவதனால்தான் தலித் மக்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடி வாழும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். வர்க்கரீதியிலும் இவர்கள்தான் நாட்டின் ஏழ்மையான பிரிவினர்.  “ஏழ்மையான பகுதிகளில் கடனை வசூலிப்பது சிரமம் என்பதனால்தான் இவ்வாறு வகைப்படுத்துகிறோம், இதில் மதத்துவேசம் இல்லை” என்று தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றன வங்கிகள். கடன் கொடுப்பது இருக்கட்டும், மாணவர்களின் உதவித் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதில் என்ன அபாயம்? ஏழ்மைக்கு நிவாரணமாக கல்வி உதவித்தொகை!  வங்கிச் சேவையை மறுப்பதற்குக் காரணம்- அதே ஏழ்மை!
தேசிய சிறுபான்மை கமிசன் ஜூலை 28  அன்று அரசு வங்கிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ரிசர்வ் வங்கிச் சுற்றறிக்கையின்படி பின்தங்கிய சமூகப் பிரிவினருக்கு எளிய முறையில் சேமிப்புக் கணக்குகளை  உருவாக்கித் தரவேண்டுமென வலியுறுத்தியது. ஆயினும், ரிசர்வ் வங்கியிடமிருந்து அவ்வாறு எந்த சுற்றறிக்கையும் வரவில்லையென்று முஸ்லீம் மாணவர்களிடம் புளுகியிருக்கின்றனர், வங்கி அதிகாரிகள்.
சரியான வேலை வாய்ப்புகளோ, தரமான கல்வியோ கிடைக்காததனால், தலித் மக்களைப் போலவே சமூகத்தின் மிகப் பின்தங்கிய நிலையில்தான் பெரும்பான்மை முஸ்லீம்கள் உள்ளனர் என்கிறது, சச்சார் கமிட்டி அறிக்கை. அரசு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, சிறு வணிகம் அல்லது சுயதொழில் செய்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களுக்கு சிறு கடன்களும், வங்கிச் சேவைகளும் அத்தியாவசியமானவை. வங்கிச் சேவைகளை மறுப்பதென்பது அவர்களை வாழவிடாமல் செய்வதாகும். இதனை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. நாடு முழுவதிலும் முஸ்லீம்களின் சேமிப்புக் கணக்கு எண்ணிக்கை இந்த வருடம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. முஸ்லீம்களின் வங்கிக் கணக்குகள் அஸ்ஸாமில் 47%மும், கர்நாடகாவில் 46.2%மும், மேற்கு வங்கத்தில் 17.44%மும், கேரளாவில் 6.90% குறைந்துள்ளன. சட்டத்தில் என்ன எழுதி வைத்திருந்தாலும் இந்து சமூகத்திலும் அதிகார வர்க்கத்திலும் ஊடுருவியிருக்கும் முஸ்லீம் விரோத உளவியல்தான் நடைமுறையில் செயல்படுகிறது.
முஸ்லீம்களை சமூகப் பொருளாதார புறக்கணிப்பு செய்து, இரண்டாம்தர குடிமக்களாக்கி அடிபணியச் செய்யவேண்டும் என்ற இந்துவெறி பாசிஸ்டுகளின் கொள்கையும், ஏழைகளுக்கு வங்கிச் சேவையை மறுக்கும் புதிய தாராளவாதக் கொள்கையும் ஊடும் பாவுமாகப் பின்னியிருக்கின்றன. மதத்துவேசம் வர்க்கத்துவேசத்திற்குள் மறைந்து கொள்கிறது. வர்க்கத்துவேசம் மதத்துவேசத்தால் புனிதப்படுத்தப்படுகிறது. வங்கிகளில் நடக்கும் இந்த அநீதியின் பொருள் இதுதான்.
www.vinavu.com

பராமரிப்பற்ற நிலையில் திப்புவின் பீரங்கி!...


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தியாகதுருகம் மலை மீது மாவீரன் திப்புசுல்தான் கட்டிய கோட்டைகளும், பிரம்மாண்டமான 3 பீரங்கிகளும் சுற்றுச் சுவர்களும் இன்றும் நிலைத்து உள்ளன. அதைச் சுற்றியுள்ள 15 கிராமங்கள் இன்றும் வரலாற்று பெருமையை உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. மலையிலிருந்த 9 அடி நீளம், 2 டன் எடையுள்ள பீரங்கியும் மற்றும் உடைந்த பீரங்கியின் துண்டு களும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு கொண்டுபோகப் பட்டுள்ளது.

மேலும் சங்கராபுரத்தை அடுத்த ராவுத்தர் நல்லூர் கிராமத்தில் உள்ள சக்தி மலையில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் நவாப்ஜான் என்ற முஸ்லிம் மன்னர் ஆண்டு வந்ததாக வரலாறு உள்ளது. இவர் பயன்படுத்திய தளவா டங்கள், ஆயுதங்கள் அப்படியே உள்ளன. இதைச் சுற்றுலா வரும் பயணிகள் பார்ப்பது வழக்கம். இம்மன்ன னின் பீரங்கி சுமார் 40 ஆண்டுகளாக அரசம்பட்டு என்ற கிராமத்தில் குருமூர்த்தி என்பவரிடம் இருந்தது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜ் அவர்கள் வரலாற்று சின்னங்களை பார்ப்பதிலும், அதுதொடர்பான தகவல்களை அறிவதி லும் ஆர்வம் உள்ளவர் என்று சொல் கிறார். அந்த பீரங்கிகளை பார்த்து அவர் ரொம்பவும் வருத்தப்பட்டாராம். அதனால் இரு கோட்டைகளில் உள்ள பீரங்கிகளை யும் எடுத்து வந்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்துள்ளாராம்.

ஆனால் இந்த கோட்டைகளும், பீரங் கிகளும் முஸ்லிம் மன்னர்கள் காலத்தை சார்ந்தவை, அவர்கள் பயன்படுத்தியவை என்பது மேற்படி பத்திரிகை மூலமாக நன்கு புலனாகிறது. ஆகவே ஆர்வம் உள்ள விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அந்த பீரங்கிகளை மக்கள் பார்க்கும் அந்தந்த கோட்டை களில் வைத்து பராமரித்து, பாதுகாத்து, காண வரும் பொதுமக்களுக்கு பார்வை யிட அனுமதித்தால்தானே அந்த பீரங்கியின் வரலாறும், கோட்டையின் வரலாறும், அவற்றின் பெருமையும் தெரியும்.

மேலும், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள கோட்டை களும், பீரங்கிகளும் சரித்திர காலத்தவை ஆகும். ஆகையால் இந்த பீரங்கிகளை தொல்பொருள் இலாகாவிடம் ஒப்ப டைக்க வேண்டும். மாவட்ட தொல் பொருள் இலாகாவிடம் தந்து வைத்தால் அதன் வரலாறு புரியும்படி எழுதிவைப் பார்கள். அதைவிட்டு விட்டு கோட்டை களை பார்க்க வருபவர்கள் அந்த இரண்டு பீரங்கிகளை மட்டும் பார்க்க விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு போவார்களா? அவர்களுக்கு அங்கு பீரங்கிகள் இருப்பது தெரியுமா? காவல்துறை அலுவலகம் உள்ளே எப்பொழுது வேண்டுமானாலும் போய் பார்க்க அனுமதிப்பார்களா? மக்கள் காவல்துறை அலுவலகம் என்றாலே போக பயப் படுவார்கள். மேலும் அங்கு வைக்கப் படும் பீரங்கிகளின் வரலாறும் காலப் போக்கில் மறைய வாய்ப்புள்ளது. காவல் நிலையத்தில் கொண்டுபோய் வைத்தால் இந்த பீரங்கி இந்த மன்னருடையது என்று யாரும் சொல்லமாட்டார்கள். காவல்துறையில் உள்ள சங்பரிவாரங்கள், வரலாற்றை மாற்றிட பீரங்கிகளை அழித்துவிடுவார்கள். மேலும் முஸ்லிம் மன்னர்களின் வரலாறும் அழிக்கப்பட்டு, மறக்கடிக்கப்படும்.

ஆகவே, எடுத்துவந்த பீரங்கிகளை இருந்த கோட்டைகளில் வைத்து பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தொல்பொருள் இலாகாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் எழிலுறுமா?


டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜும்ஆ மஸ்ஜித் முகலாய மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்டதாகும். ஒன்றரை லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் தொழுகை நிறைவேற்றும் வண்ணம். மிகப் பிரம்மாண்டமாகவும் எழிலுறவும் அமைக்கப்பட்டுள்ள டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை மன்னர் ஷாஜகான் தனது அரச மண்டபமான டெல்லி செங்கோட்டையில் இருந்து பார்க்கும் வண்ணம் அமைத்தார்.
ஆனால், காலங்கள் செல்ல செல்ல அதிகமாக கடைகள் முளைத்தன. இந்நிலையில் டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகுபடுத்த 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி வரலாற்று சிறப்பு மிக்க டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகுபடுத்த வேண்டும்.

2008 மே 18ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதையும், சுற்றியுள்ள பகுதிகளையும் அழகுபடுத்த வேண்டும் என்று 2006 அக்டோபர் மாதம் நீதிமன்றம் டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. ஆனால், இது தொடர்பான எவ்வித நடவடிக்கையும் இன்னும் தொடங்கப்படவில்லை.

டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகு படுத்தும் பணியில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள விஜய்சிங் இந்த திட்டத்தினை மீண்டும் திருத்தி வரைவு செய்வதாக அறிவித்திருக்கிறார்.

1979லில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவின்படி ஜும்ஆ மஸ்ஜிதைச் சுற்றியும் பள்ளிவாசல் வளாகங்கள் விரிந்திருந்தன என்ற உண்மை வெளியானது. இந்நிலையில் டெல்லி மஸ்ஜிதின் பாரம்பரிய அழகைக் கெடுக்கும் வண்ணம் பல்முனை வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய பெருமை மிக்க டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதின் எழில் மீண்டும் மீட்கப்படுமா என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.

அஜ்மீர் குண்டுவெடிப்பு:இந்திரேஷ்குமார் கைதாகிறார்

புதுடெல்லி,அக்.26:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸால் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள இந்திரேஷ் குமாரிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், தெளிவான தகவல்கள் கிடைத்தால் கைதுச் செய்யப்படுவார் எனவும் ஏ.டி.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு ஆலோசனை நடத்திய ஜெய்பூர் குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் இவர்கள் தங்கியிருந்ததற்கான ஆவணங்களை போலீஸ் பரிசோதித்து வருகிறது.

குண்டுவெடிப்பிற்காக கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி இங்கு வைத்து இந்திரேஷ்குமார் பங்கேற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றுள்ளது. தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சுவாமி அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசிய கூட்டங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தவேண்டிய இடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டங்களிலும் இந்திரேஷ்குமாரின் பங்கேற்புக் குறித்த விசாரணையில் தற்பொழுது ஏ.டி.எஸ் இறங்கியுள்ளது.

குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் செக்-இன் பதிவேட்டில் முகவரி எழுதிய நபரின் கையெழுத்து இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷியுடையதுதான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மனோஜ்சிங் என்ற பெயரில்தான் சுனில் ஜோஷி அறையை புக் செய்துள்ளார். சுனில் ஜோஷியின் தேவாஸ் என்ற இடத்திலிலுள்ள வீட்டில் வைத்து கண்டெடுக்கப்பட்ட் டயரியிலிலுள்ள தகவல்களையும் ஏ.டி.எஸ் பரிசோதித்து வருகிறது. தேவாஸில் தனது வீட்டில் வைத்து சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தார்.

குண்டுவெடிப்பில் நேரடித் தொடர்புடைய சுனில் ஜோஷியை ரகசிய வெளியே கசியாமலிருக்க அவருடைய சக தோழர்களே கொலைச் செய்துள்ளனர் என்பதும் தெளிவாகியுள்ளது.

இந்தூரிலிருந்து சுனில் ஜோஷியும், லோகேஷ் சர்மாவும் சேர்ந்து வெடிக்குண்டு நிர்மாணிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே மார்க்கெட்டிலிருந்துதான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைப்பதற்கான வெடிக்குண்டுகளும் வாங்கப்பட்டுள்ளன.

இந்திரேஷ் குமாருடன், தற்பொழுது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கர்னல் புரோகித், பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோரையும் ஏ.டி.எஸ் விசாரணைச் செய்யும். அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசியக் கூட்டத்தில் இருவரும் பங்கெடுத்திருந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

இந்தோனேசியாவில் சுனாமி: 113 பேர் பலி, 500 க்கும் மேற்பட்டோரை காணவில்லை

ஜகார்த்தா,அக்.27:இந்தோனேசியாவில் திங்கள்கிழமை இரவு கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி உருவானது. இதில் 113 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. நிலநடுக்கத்தின் வீச்சு 7.7 ரிக்டர் அளவாக இருந்ததால் சுனாமி ஏற்பட்டது. 10 அடி உயரத்தில் உருவான அலைகள், மெந்தாவைய் தீவுக்குள் புகுந்தது. இதில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. சுனாமி ஏற்பட்டதை அறிந்த மக்கள் அவசர அவசரமாக வீடுகளைவிட்டு மேடான பகுதிக்கு சென்றுவிட்டனர். எனினும் சுனாமியில் சிக்கி 113 பேர் உயிரிழந்தனர். 500 பேரைக் காணவில்லை. அவர்களது நிலைமை என்னவென்று தெரியவில்லை.

ஆக்ரோஷமாக எழுந்த அலைகளால் கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. கடலோரத்தில் படகு சாகசத்தில் ஈடுபட்டிருந்த சில ஆஸ்திரேலியர்களை அலை தூக்கி வீசியது. ஆனால் அவர்கள் நீந்தி உயிர் பிழைத்துவிட்டனர்.

இந்தோனேசியா நிலநடுக்க அபாயமிக்க பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. 2004-ல் அங்கு 9.1 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் உருவானது. இதில் 2,30,000 பேர் கொல்லப்பட்டனர்.

யு.ஏ.இ:ராஸ்-அல்-கைமாவின் ஆட்சியாளர் மறைவு

ராஸ்அல்கைமா,அக்.27:ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு பகுதியான ராஸ்அல்கைமா ஆட்சியாளர் ஷேக் ஸக்ர் பின் முஹம்மது அல் காஸிமி(வயது 92) மரணமடைந்தார்.. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்).

உலகிலேயே அதிக வயதையுடைய ஆட்சியாளர் ஸக்ர் பின் முஹம்மது அல் காஸிமி ஆவார். ராஸ்அல்கைமாவை சொந்த இடமாகக் கொண்ட அவர் 1948 ஜூலை 17 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். மேற்கொண்டு தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்று வாம் நியூஸ் ஏஜென்ஸி தெரிவிக்கின்றது.
செய்தி:மாத்யமம்

சிறைக்குள் வேண்டாம் போலீஸ்! இப்படிக்கு குணங்குடி ஆர்.எம்.அனீபா! ஜீனியர் விகடனில் வெளிவந்தக் கட்டுரை

அரசியல் கைதிகளால் நிரம்பி வழிகிறது, அமைதிப் பூங்காவான தமிழகச் சிறைச்சாலைகள்!

கைதிகள், தாங்கள் செய்த குற்றங் களை உணர்ந்து, திருந்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்தச் சிறைகள், சித்ரவதைக் கூடங்களாக விளங்குவதை... அதனுள் 13 ஆண்டுகள் இருந்து அனுபவித்த நான், எந்த தவறும் செய்யவில்லை என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவன்.

வெள்ளைக்காரன் ஆண்ட 1894-லிலேயே சிறைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அவன் இந்த நாட்டைவிட்டுப் போன பிறகும், அந்த ஷரத்துகள் இன்று வரை அமலில் இருக்கின்றன. தன்னுடைய அரசாங்கத்தை எதிர்க்கும் அடிமைகளைத் துன்புறுத்தக் கொண்டுவரப்பட்ட சிறைச் சட்டம், சுதந்திர இந்தியாவில் 'விடுதலை' இந்தியனைப் பழிவாங்கவும் பயன்படுத்தப்படுவதுதான் கோரமானது!

பீகார் மாநிலம் பாகல்பூர் சிறையில், கைதிகளின் கண்களையே பிடுங்கி வீசினர். 1998-ல் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத் தில், 10-க்கும் மேற்பட்ட கைதிகள் கொலை செய்யப்பட்டார்கள். 1999-ல் பாளையங்கோட்டை சிறையில் இருந்து குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழு நபர்கள் அதிரடியாக வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு அவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, 30 நாட்கள் நிர்வாணமாக வைக்கப்பட்டார்கள். அதே ஆண்டின் இறுதியில் மதுரை, பாளை மத்திய சிறை தவிர, மற்ற ஆறு மத்திய சிறைகளில் இஸ்லாமிய சிந்தனையாளர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, தனி செல்லில் 45 நாட்கள் சூரிய வெளிச்சம்கூட படாத வகையில் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

1990-களின் தொடக்கத்தில் இருந்து சிறைகளில் 'உயர் பாதுகாப்புத் தொகுதி' என்ற தனிப் பிரிவை உருவாக்கி சித்ரவதை செய்து வருகிறார்கள். இங்கே மனித வாடையும், இயற்கைக் காற்றும் மருந்துக்குக்கூட கிடைக்காது. இதில்தான் புரட்சியாளர்கள், தமிழ் தேசிய மற்றும் இஸ்லாமியப் போராளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அரசின் சட்டபூர்வ, சட்ட விரோத வன்முறைகள் இவர்கள் மீது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக, மனித உரிமைகளை மீறுகிற வகையில் இவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அரசியல் சிறைவாசிகள் முழுமையாக உளவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்படுகின்றனர். சிறை நிர்வாகம் என்பது பெயர் அளவில்தான். உளவுத் துறையே சர்வ அதிகாரம் கொண்டதாக செயல்படுகிறது.

சிறையில் 90 சதவிகிதம் பேர் ஏழை மற்றும் சாதாரண மக்கள். இவர்கள் அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். 'இவர்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் என்றால், சட்டபூர்வமான எந்தத் தண்டனையும் தரட்டும். ஆனால், சிறைக்கூடங்களில் சித்ர வதைகள் செய்வது என்ன நியாயம்?' என்பதுதான் எங்களது கேள்வி!

பணம் படைத்த அதிகாரத்தின் ஆராதனைக்கு உரிய ஒருவர், பல கோடி மோசடியில் மாட்டி, இதே சிறைக்குள் வந்தால், அவருக்கு ராஜ மரியாதை தரப்படுகிறது. சிறை வாசலில் நின்று அதிகாரிகள் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். நோயே இல்லை என்றாலும், சிறை மருத்துவ மனைகளில் அவர்கள் தங்கவைக்கப்படுகிறார்கள். சொகுசான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரப்படுகிறது. உள்ளே வருபவர் சாதாரணமானவர் என்றால், எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்படுகிறார்.

'சிறைக் கட்டடத்தில் உள்ள ஒவ்வோர் தொகுதியிலும், தனித் தனி புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு, அவை மாவட்ட முதன்மை நீதிபதியின் நேரடிப் பராமரிப்பில் இருக்க வேண்டும். மாத ஆய்வுக்கு மாவட்ட நீதிபதி சிறைக்கு வரும்போது, சிறை அதிகாரிகளைத் தவிர்த்து சிறைவாசிகளிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் சொல்கின்றன. ஆனால், இவை எங்கும் நடைமுறையில் இல்லை.

இந்தக் குறைபாடுகள் அனைத்தை யும் ஒரேநாளில் முற்றிலுமாகத் தீர்த்துவிட முடியாதுதான். அவற்றைப் படிப்படியாகச் சரிப் படுத்தினாலும்கூடப் போதும். ஆனால், அதற்கும் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும் இது தொடர்பான ஒரு குறைந்தபட்சக் கோரிக்கை என்ன வென்றால், மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் சிறைத் துறையைக் கவனிக்கும் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதே.

'கைதிகள் தங்களின் அடிமைகள்!' என்று நினைக்கும் போலீஸார் கையில் இன்று சிறைகள் இருக் கின்றன. காவல் துறை இயக்குநர் ஆர்.நட்ராஜ் சிறைத் துறை இயக் குநராக இருந்தபோது... இந்தியாவில் முதன் முதலாக இந்து, முஸ்லிம், கிறிஸ்துவப் பண்டிகை நாட்களில் சிறைவாசிகளை அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி அளித்தார். ஒரே ஒரு அதிகாரி மட்டும் இப்படி இருந்தால் போதாது. போலீஸார் அனைவருக்குள் ளும் அந்த மன நிலை புகுத்தப்பட வேண்டும்.

காவல் துறையினரால்அடக்கு முறைக்கு ஆளாகி, சிறைப்பட்டு உள்ளவர்களைப் பராமரிக்கும் மனிதாபிமானம் சார்ந்த பொறுப் புக்கு, அதே காவல் துறையின் தலைவர்களை நியமனம் செய் வதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, இந்திய ஆட்சிப் பணி, சுகாதாரத் துறை அல்லது நீதித் துறையைச் சார்ந்தவர்களை சிறைத் தலைவராக நியமனம் செய்வதன் மூலம், மனித உரிமைகள் மீறலை பெருமளவுக்குக் கட்டுப் படுத்தலாம்!

படம்: அ.ரஞ்சித்

நன்றி ஜுனியர்விகடன்

செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஒரு ஏழை சகோதரியின் கல்விக்கு உதவிடுவீர்!

ஒரு ஏழை சகோதரியின் கல்விக்கு உதவிடுவீர்!
உளவியல் பாடத்தில் மாநிலத்தில் முதலிடத்தை பெற்று சமுதாயத்திற்கு பெருமைத் தேடி தந்த காயல்பட்டிணம் பள்ளிமார் தெருவைச் சேர்ந்த ஏழை மாணவி ஃபாத்திமுத்து தனது மேற்படிப்பிற்கு உதவிட வேண்டி தன்னை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார்.


அந்த ஏழை மாணவியின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக ஒளிவிட சமுதாயச் சொந்தங்களே உதவிடுவீர்!

இந்த மாணவிக்கு கல்வி உதவி கிடைத்திட தினமலர் பத்திரிக்கை முன் வரும் பொழுது நம் சமுதாயம் முன்வர வேண்டாமா? எனவே தாமதப்படுத்தாமல் முன் வாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான்.
மாணவியின் முகவரி

ஃபாத்திமுத்து
த/பெ. அபூமுஹம்மது
49, பள்ளிமார் தெரு,
காயல்பட்டிணம்,
தூத்துக்குடி மாவட்டம்
மொபைல் : 9698386885.
இடுக்கை  இட்டது http://samuthayaurimai.blogspot.com

திங்கள், 25 அக்டோபர், 2010

க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன்.

    சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை.

    அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.

    பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000.

    பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின்  2  வருடத்துக்கு  ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.

    ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.

    அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!

    அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.

    பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

    இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.

    ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?

    இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!



    நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
    உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!

    உங்கள் கண்ணீர்,
    உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
    அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!


اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
(இத் தகவலை மின்னஞ்சல் வழியாக என்னுடன் பகிர்ந்து கொண்ட நண்பர் சோழபுரம் ஹாசிக் மைதீன் அவர்களுக்கு நன்றி.)

அனைத்து இயக்கங்களுக்கும்,கட்சிகளுக்கும் ஒரு எடுத்துகாட்டு உங்கள் தமுமுக.....


அனைத்து இயக்கங்களுக்கும்,கட்சிகளுக்கும் ஒரு எடுத்துகாட்டு உங்கள் தமுமுக இதோ அமைதியாக நடுக்கிறது கட்சி மற்றும் கழக தேர்தல்...எந்த ஒரு பிரச்சனை இன்றி தலைமை சொல்வதை கேட்கும் தொண்டர்கள் மாஷால்லாஹ் இது போல அனைவரும் இருக்க அல்லாஹ் விடம் துவா செய்கிறேன்.....தமுமுக தொண்டர்கள் அனைவரும் இப்படியே.....!!!!!நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்!!!!!....

அனைத்து இயக்கங்களும் ஒற்றுமையாக முன் நின்று கட்தும் இறை இல்லம்...


அனைத்து  இயக்கங்களும் ஒற்றுமையாக முன் நின்று கட்டும்  இறை இல்லம் ,வளரட்டும்  உங்கள் ஒற்றுமை , அனைவரையும் ஒருங்கிணைத்த இனியவனுக்கு  என் வாழ்த்துக்கல் ( தனிநபர் துதி பாடும் பள்ளி வாசலாக அமைத்து விடாதிகள்) உங்கள் அடித்தளம் இன்றே ஆணி வேராக இருக்கத்தும், இது எதிர் காலத்திற்கு நன்று ,  இதுவே நம் ஒற்றுமையாக இருக்க அடித்தளம் இது எல்லாருக்கும் ஒரு எடுத்து காட்டாக இருக்கட்டும்.....அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக....

சனி, 23 அக்டோபர், 2010

ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு-ஆர்.எஸ்.எஸ். தலைவர் மீது குற்றப்பத்திரிக்கை

டெல்லி: ஆஜ்மீர் குண்டுவெடிப்பு [^] வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ்குமார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவினர் இந்த குற்றப்பத்திரிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இந்திரேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்தான் இந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்திரேஷ் குமார் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஜெய்ப்பூரில் ரகசியக் கூட்டம் போட்டனர். அதில் ஆஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர்பான சதித் திட்டம் தீட்டப்பட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி வியாழக்கிழமை மாலை, ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற காஜா மொய்னுதீன் சிஷ்டி தர்காவில் குண்டு வெடித்தது. இதில், நான்கு பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.

ரம்ஜான் மாதத்தின் 3வது நாள் நோண்பை ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் ஒன்று கூடி முடித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.

பள்ளிக் கூட பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பத்திரிக்கை குறித்து இந்திரேஷ் குமார் கூறுகையில், இது எனக்கு எதிரான, காங்கிரஸ் [^] அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். இந்த குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை. இது அரசியல் சதி வேலை [^] . விசாரணை அமைப்பை எனக்கு எதிராக காங்கிரஸ் பயன்படுத்துகிறது.

நாங்கள் வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை. அது எங்களது கொள்கைக்குப் புறம்பானது. நீதிக்காக கோர்ட்டை நான் நாடுவேன் என்றார்.

பணம் கொடுத்து உன்னை மணம் முடிப்பதற்குப் பெயர் திருமணமா;

வரதச்சனை  கொடுமைகள்.....


தடுத்த ஒன்றைகொடுக்கச் சொல்லிக் கேட்கிறாய்;

கொடுக்க மறுத்தால் மணக்க மறுக்கிறாய்!

நீ பட்டம் பெற்றதிற்கு விலையாய் கூலிக் கேட்கிறாய் -

நான் கொடுக்காவிட்டால் எனக்கு பட்டம் கொடுக்கிறாய்!

மணத்திற்கு முன்னேமடிப்பிச்சைக்  கேட்கிறாய்;

கொடுத்ததிற்க்குப் பின்னேஅதிகாரம் தொடுக்கிறாய்!

பணம் கொடுத்து உன்னை மணம் முடிப்பதற்குப் பெயர் திருமணமா;

இல்லை பணம் செலுத்திப் பணிப் புரியும்தனியார் நிறுவனமா!


முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .


இதை உடனடியாக அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445


2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14  தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207

14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s

22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18

16. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

17. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18
****************
 
இடுகை வெளியிட்டது http://adiraipost.blogspot.com

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவோம்!


E-mail Print PDF
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மிகுந்த உற்சாகத்தோடு தமுமுக மற்றும் மமகவின் நிர்வாக தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.

முறையாக அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் மூலம் நடைபெற்று வரும் தேர்தல்; தமிழகத்தில் இருக்கும் பிற அரசியல் கட்சிகளுக்கும், இந்தியா முழுதும் இருக்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கும் ஒரு முன் மாதிரி என்றால் அது மிகையல்ல.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தல்கள் மூலம் கிளை அமைப்புகள் புனரமைக்கப்பட்டு, மழையில் நனைந்த தாவரங்களைப் போன்ற புத்துணர்வுடன் தொண்டர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.

ஆங்காங்கே நடைபெறும் தேர்தல்களில் சில இடங்களில் கடும் போட்டி ஏற்பட்டு, வாக்குச்சீட்டுகளின் வழியாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர். சில இடங்களில் ஒருமித்த முடிவின் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல்களின்போது ஊரெங்கும் கழகச் கொடிகளும், கட்சிக்கொடிகளும் கட்டப்பட்டு பெரும் பரபரப்புகளுக்கிடையே தேர்தல் நடைபெற்று வருவதாக தேர்தல் பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சில இடங்களில் இரவு நேரங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, விளக்குகள் போடப்பட்டு விழாப் போலவும் தேர்தல்கள் நடைபெறுவதாகவும், தேர்தலை வேடிக்கைப் பார்ப்பதற்கே பெரும் கூட்டம் கூடுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

தமுமுக மற்றும் மமகவின் தேர்தலின் முடிவில் யார் வெற்றி பெற்றார்கள்? என்பதை தெரிந்துக் கொள்ள அப்பகுதி ஜமாத்தார்களும், பொதுமக்களும் காட்டக்கூடிய பேரார்வம் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

மாபெரும் இயக்கத்தின் மீது முஸ்லிம் மக்களும், இதர பொதுமக்களும் காட்டும் ஈடுபாட்டையும், அவர்களின் எதிர்பார்ப்பையும் தான் இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

எனவே வெற்றி பெற்றவர்கள் தங்கள் பொறுப்பையும், கடமையும், உணர்ந்து இறைவனுக்கு பதில் கூறவேண்டும் என்ற நினைவோடு செயல்படவேண்டும். தோல்வியடைந்தவர்களை நமது சகோதரர்கள் என்ற உணர்வோடு அரவணைத்து, மீண்டும் அவர்களுக்கான வாய்ப்பு உண்டு என்பதை நினைவூட்டி பணியாற்றுவது மிகவும் அவசியமாகும். மகிழ்ச்சியில் மூழ்கிவிடமால், தங்களை ஒற்றுமையுடன் தயார்படுத்த வேண்டிய நேரமிது.

இன்னும் 6 மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிறது. வலுவான அதிமுக கூட்டணியில் நாம் இடம் பிடித்திருக்கிறோம்.

நமக்கான நியாயமான அரசியல் ஒதுக்கீடுகள் கிடைக்கவிருக்கும் நிலையில், வலுவான தொகுதிகளை கண்டறிந்து, அங்கெல்லாம் நமது செயல் திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் விரிவுப்படுத்த வேண்டியுள்ளது.

தீவிர உறுப்பினர் சேர்ப்பு, சுவர் விளம்பரங்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பூத் கமிட்டி அமைத்தல், எல்லா சமூக மக்களுடனும் நெருக்கத்தை மேலும் ஏற்படுத்துதல், வட்டார ரீதியில் செயல்படும் சமுதாய அமைப்புகளுடன் உறவை வலுப்படுத்துதல் என நிறையப் பணிகள் காத்திருக்கின்றன. நிதி சேகரிப்பு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே அலட்சியமின்றி, கவனமுடன், நிதானத்துடன், பணிகளை தொடங்க வேண்டும்.

பெரும்பாலான மாவட்டங்களில் தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு சில மாவட்டங்களிலும் இம்மாதத்தில் தேர்தல்கள் முடிவடைய உள்ள நிலையில், புதிய ரத்தம் பாய்ச்சப்பட்ட உற்சாகத்தில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் உடனே களம் இறங்க வேண்டும். அது தான் நமது அடுத்த 6 மாத செயல்திட்டமாகும்.
www.tmmk.info

வெள்ளி, 22 அக்டோபர், 2010

காட்டுமன்னார்குடி தனியார் பள்ளியின் கட்டண நிர்ணயம் இதோ உங்களுக்காக...

 நமது மன்னையின்  அணைத்து தனியார் பள்ளியின் கட்டணம் விஹிதம் வெஹுவஹா குடைந்து உள்ளது ஆகவே மக்களே தமிழ்நாடு அரசு நிர்ணயத இந்த கட்டணம் தான் இனி செல்லும்....

http://www.tn.gov.in/departments/sedu/feestructure/default.html

கஷ்மீர் மற்றும் குஜராத் பிரச்சனைகள் மூலம் இந்தியா ஜனநாயக மதசார்பற்ற நாடு என்றுக் கூற தகுதியில்லை - அருந்ததிராய்

டெல்லி,அக்.22:டெல்லியில் நேற்று ‘கஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் நடைப்பெற்ற கருத்தரங்கில் 'யாருக்கேனும் ’ஷு’வை எறிய வேண்டுமானால் இப்பொழுது எறிந்துக் கொள்ளுங்கள் எனக் கூறியவாறு தனது உரையை துவக்கினார் பிரபல பத்திரிகையாளரும், மனித உரிமை போராளியுமான அருந்ததிராய்.

மேலும் அவர் கூறியதாவது: கஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதி அல்ல. கஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்பதை ஐ.நாவில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. 68 ஆயிரம் கஷ்மீரி முஸ்லிம்களை கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாயக நாடு என்றுக் கூற உரிமையில்லை.

குஜராத்தில் 2500 முஸ்லிம்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுக்கூற தகுதியில்லை. வலுவான ராணுவத்தினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும் கஷ்மீரி இளைஞர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பார்த்து சல்யூட் செய்யாமலிருக்க முடியவில்லை என அருந்ததிராய் உரை நிகழ்த்தினார்.

இக்கருத்தரங்கில் புரட்சிக் கவிஞர் வரவரரவ், மனித உரிமை ஆர்வலர்கள் ஷேக் ஷவ்கத் ஹுசைன், அமீத் பட்டாச்சார்யா, என்.வேணு, மாலெம், நஜீப் முபாரகி, சுஜாதோ பத்ரா, பேராசிரியர்கள் எஸ்.எ.ஆர் கிலானி மற்றும் ஜி.என்.ஸாயிபாபா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கர்காரே படுகொலை:பதில் அளிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை,அக்.21:மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரேயின் கொலையின் பின்னணியில் ஹிந்துத்துவா சக்திகள் செயல்பட்டுள்ளன என்பதனை சுட்டிக்காட்டி சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் பதில் அளிக்க மும்பை போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பீகார் மாநில எம்.எல்.ஏக்களான ராதாகாந்த் யாதவும், ஜோதி பெடேக்கரும் சமர்ப்பித்த மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மும்பை தாக்குதலின்போது காமா மருத்துவமனையில் நடந்த தாக்குதலுக்கு காரணம், அஜ்மல் கஸாபோ அல்லது அபூ இஸ்மாயிலோ காரணமல்ல எனவும், அத்தாக்குதலின் பின்னணியில் அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புதான் செயல்பட்டுள்ளது எனவும் ராதாகாந்த் யாதவ் தான் அளித்த மனுவில் கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் அதற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளான அபினவ் பாரத் பயங்கரவாதிகளை கர்காரே கைதுச் செய்திருந்தார்.இதற்கு பழிவாங்க அபினவ் பாரத் கர்காரேக்கு குறிவைத்தது.

முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலான எஸ்.எம்.முஷ்ரிஃப் தனது கர்காரேயைக் கொன்றது யார்? என்ற நூலிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக யாதவ் குற்றஞ்சாட்டுகிறார். இதனைக் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவேண்டும் என ராதாகாந்த் யாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஷ்ரிஃப் எழுதிய புத்தகங்களில் உண்மைகளல்ல, அபிப்ராயங்கள்தான் உள்ளன என அரசு தரப்பில் வாதாடிய துணை சோலிசிட்டர் ஜெனரல் டாரியஸ் கம்பாட்டா வாதிட்ட பிறகும் நீதிமன்றம் அதனை அங்கீகரிக்கவில்லை.

கர்காரேயின் மரணத்தைக் குறித்து வேறு சிலரும் சந்தேகத்தை முன்வைத்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், பொறுப்பான போலீஸ் அதிகாரி இதற்கு பதிலளிக்கவேண்டுமென உத்தரவிட்டது.

இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நவம்பர் 29 ஆம் தேதி இதற்கு பதில் அளிக்கப்படும் என அரசுதரப்பு வழக்கறிஞர் பி.எ.பால் அறிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

குஜராத் இனக் கலவரம்:குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் ஆன்லைனில்குஜராத் இனக் கலவரம்:குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் ஆன்லைனில்

மும்பை,அக்.20:2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஏராளமான முஸ்லிம்களைக் கொலை செய்து இன சுத்திகரிப்பு நடத்திய சங்கபரிவாரங்களுக்கு எதிரான வழக்குகளில் தகுந்த ஆதாரங்களை சமர்பித்து முக்கிய பங்காற்றி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் "நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு (The Citizens for Justice and Peace)" தான் இதுவரை இந்த இந்து தீவிரவாதிகளுக்கு எதிராக திரட்டிய மொத்த ஆதாரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்திய தேசத்திற்கு உலக நாடுகளின் முன்னிலையில் மாபெரும் அவமானத்தையும், தலைக் குணிவையும் ஏற்படுத்திய இந்த இன சுத்திகரிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, இதனை நடத்திய இந்து தீவிரவாத கும்பல்களுக்கு உரிய தண்டனை கொடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று களமிறங்கிய இந்த The Citizens for Justice and Peace அமைப்பு, தகுந்த ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதில், குற்றம் செய்த தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் பணிகளை செய்து வந்த அரசுக்கெதிராக போராடி வந்தது.

தான் சேகரித்த ஆதாரங்களை உடனுக்குடன் நீதிமன்றத்தில் சமர்பித்தும் வந்தது. ஆனால் நமது நீதிமன்றங்கள் தம்மால் முடிந்த அளவிற்கு விசாரணையை காலம் தாழ்த்தின என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வருத்தம் தரக்கூடிய விஷயம். மற்றொரு புறம், குற்றவாளிகளுக்கெதிராக தேவைக்கு அதிகமாகவே கிடைத்த ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் தட்டிக்கழித்தும், நீதி விசாரணையை காலவரையின்றி இழுத்தடித்தும் வந்தன.

இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் முன் சமர்பிக்க எங்களால் இயன்ற அளவு முயற்சிகள் செய்து வந்துள்ளோம். அதில் புதிய முயற்சியாக அனைத்து ஆதாரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை
http://www.gujarat-riots.com/ என்ற இணைய தளத்தில் கொடுத்துளோம் என்று TCJP அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து தாங்கள் எடுத்துவரும் இதுபோன்ற முயற்சிகளால் குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கீழ்காணும் முக்கிய ஆவணங்கள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன:

* தேசிய மனித உரிமை கழகத்தின் (NHRC) அதிகாரப்பூர்வ அறிக்கை
* தேசிய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை
* குஜராத் மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை
* உச்ச நீதிமன்றம் மற்றும் பிரத்தியோக விசாரணை நீதிமன்றங்களின் தீர்ப்புகள்
* கலவர நேரத்தில் முக்கிய தலைவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள். அதில் யார் யாருடன் பேசினர், கலவர நேரத்தில் என்னென்னவெல்லாம் பேசினார்கள் என்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆதாரம்
* மாநில அரசு தெரிவித்த நிவாரண பணிகள் மற்றும் புணர்நிர்மான, மறுவாழ்வுக்கான பணிகளுக்கான அறிக்கைகள்
* முன்னாள் மாநில உளவுத்துறை தலைவர் RB ஸ்ரீகுமாரின் சட்டபூர்வ ஒப்புதல் அறிக்கைகள் (affidavits) அதன் மற்ற இணைப்புகள்

தேசிய அவமானமாகக் கருதப்படும் முஸ்லிம்களுக்கெதிரான இந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கையை குஜராத் மாநில அரசாங்கம் தான் ஆசீர்வதித்து முன்னின்று நடத்தியது என்பதற்குப் போதுமான ஆதாரம் உள்ளதா? என்று அனைவராலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு, மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய எங்களின் தொடர் முயற்சி வெகு விரைவில் விடை கிடைக்கும் என்று தாங்கள் நம்புவதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

ஆனால் இந்த ஆதாரங்கள் எல்லாம் தகுந்த முறையில் விசாரிக்கப்பட்டு முறையான நீதி வழங்கப்படுமா என்பதை இப்போது நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பாப்போம் என்றும் "இந்திய தேசத்தின் நீங்கா அவமானமாக நிலைபெற்றுவிட்ட இந்த கருப்பு நாட்களை நேர்மையோடு விசாரித்து நீதிவழங்க உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்திய தேசத்தின் அரசியல் அமைப்பிற்கு நீதியை நிலைநாட்டும் நேர்மையும் தைரியமும் உண்டா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.