திங்கள், 1 நவம்பர், 2010

ஹிஜாப் அணிந்த அதிபர் மனைவி: துருக்கியில் சர்ச்சை...

அங்காரா,அக்.31:ஹிஜாப் அணிந்துக்கொண்டு துருக்கி அதிபர் அப்துல்லா குல்லின் மனைவியான ஹைருன்னிஷா குல் துருக்கி குடியரசு தின விழாவில் பங்கேற்றதற்கு தீவிர மதசார்பற்றவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் முக்கிய எதிர்கட்சித் தலைவரும், ராணுவ அதிகாரிகளும் பங்கேற்கவில்லை. நாட்டின் முதல் பெண்மணியான ஹைருன்னிஷா குல் ஹிஜாப் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்க அதிபர் குல் அனுமதித்து அளித்திருந்தார்.

அதிபரின் தலைமையில் நடைப்பெற்ற குடியரசு விழா நிகழ்ச்சிக்கு அரைமணி நேரம் முன்பு ராணுவம் தனியாக விழாவைக் கொண்டாடியது. பொது இடங்களில் ஹிஜாப் அணிவது துருக்கியில் தடைச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கெதிரான முயற்சியை அதிபர் மேற்கொள்வதாக தீவிர மதசார்பற்றவாத ராணுவத்தினர் குற்றஞ் சாட்டுகின்றனர்.

ஹிஜாப் அணிவதற்கான கட்டுப்பாட்டை உடைப்பதற்கான அரசின் முயற்சி இது எனவும் அவர்கள் கூறுகின்றனர். பல்கலைக்கழகங்களிலும், அரசு அலுவலகங்களிலும் ஹிஜாப் அணிவதற்கு தடை இருந்தபோதிலும் கூட பொதுமக்கள் இதனை புறக்கணித்துள்ளனர்.

எங்களுடைய கருத்துக்களை புறக்கணித்துவிட்டு முதல் பெண்மணியான அதிபரின் மனைவி ஹிஜாப் அணிந்ததால் நிகழ்ச்சியை புறக்கணித்ததாக குடியரசு மக்கள் கட்சியின் தலைவர் கமால் கிலிக்தருக்லு தெரிவித்துள்ளார்.

துருக்கியை இஸ்லாமிய நாடாக மாற்றும் முயற்சி என்ற குற்றச்சாட்டை அரசு வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.

ஹைருன்னிஷா குல் ஹிஜாப் அணிந்து பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற சம்பவம் முன்னரும் நடந்துள்ளது.அப்பொழுது இதேப்போன்ற விவாதம் கிளம்பியது குறிப்படத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக