சனி, 20 நவம்பர், 2010

சிங்களவராக இருந்து முஸ்லிமாக மாறிய பெண் எழுத்தாளர் எட்டு மாதமாக சிறையில்

சிங்கள பௌத்தராக இருந்து இஸ்லாமியராக மாறி இருக்கும் சர்ச்சைக்கு உரிய எழுத்தாளர் சரா மாலினி பெரேரா துரதிஷ்டமாக இம்முறையும் பெருநாளை சிறையில் கழிக்க வேண்டியவர் ஆகி விட்டார்.


இவர் பஹ்ரெய்னில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பௌத்தராக இருந்து இஸ்லாமியராக மாறியமை எப்படி? என்பதை From Darkness to Light என்கிற நூலில் விபரமாக எழுதி இருந்தார்.

சுமார் எட்டு மாதங்களுக்கு முன் இலங்கை வந்திருந்தபோது நாட்டுக்கும், அரசுக்கும் எதிராக செயற்பட்டார், தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறையில் கழித்த இரண்டாவது பெரு நாள் இதுவாகும். இவருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றது. எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படுகின்றது.

நேற்றைய பெருநாளின்போது இவரின் பிரிவை கடுமையாக உணர்ந்த குடும்பத்தினர் இவரின் விடுதலைக்காக இறைவனிடம் மன்றாடுகின்றனர்.

மாலேகான் குண்டு வெடிப்புக் காவித் தீவிரவாதி சுவாமி ஆசிமானந்த் கைது!மாலேகான் குண்டு வெடிப்புக் காவித் தீவிரவாதி சுவாமி ஆசிமானந்த் கைது!

மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படும் சுவாமி ஆசிமானந்தை சிபிஐ வெள்ளிக் கிழமையன்று கைது செய்தது.
சுவாமி ஆசிமானந்த் கடந்த இரண்டு நாள்களாக சிபிஐ மற்றும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தப்பித்து வந்தார்.
குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிமானந்த் ஆசிரமம் நடத்தி வருகிறார். நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கும் இந்த ஆசிரமத்தில் வைத்தே திட்டம் தீட்டப்பட்டது என காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தப் பகுதியில் பழங்குடியினருக்காக பள்ளி ஒன்றையும் ஆசிமானந்த் நடத்தி வருகிறார். கிறிஸ்தவ ஆதிவாசிகளை இந்து மதத்திற்கு மாற்றும் பணியையும் இவர் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

காவித் தீவிரவாத நெட்வொர்க்கின் மூளையாகக் கருதப்படும் சுனில் ஜோஷியுடன் ஆசிமானந்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ முன்னாள் அதிகாரி புரோஹித் மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா ஆகியோருடனும் ஆசிமானந்த்துக்கு தொடர்பு உள்ளதாகக் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 15 நவம்பர், 2010

இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

தியாகப்பெருநாள் சிந்தனைகள்

சொந்த நலனுக்காகவும் சுய லாபத்திற்காகவும் இவ்வுலகில் செய்யும் முயற்சிகள் யாவும் நிச்சயமாக தியாகமாகாது. தியாகமென்றால் அதற்கொரு லட்சியம் இருக்கவேண்டும். ஒரு உன்னதமான நோக்கம் வேண்டும். அதுவும் நம்மைப்படைத்தவனின் படைப்பின் நோக்கத்தை நிறைவுச்செய்வதற்காக செய்யும் தியாகம்தான் உன்னதமானது.
மனிதகுல வரலாற்றிலேயே அத்தகையதொரு மகத்தான தியாகத்திற்கு சொந்தக்காரர்தான் அல்லாஹ்வின் தூதர் நபி இப்ராஹீம்(அலை...) அவர்கள். வல்ல நாயன் அல்லாஹ் தனது திருக்குர் ஆனில் தனது நண்பர் என்று கூறுமளவுக்கு தியாகத்திற்கு ஒரு இலக்கணமாக வாழ்ந்தவர்கள். அல்லாஹ் இட்ட கட்டளைகள் அத்தனையையும் அணுவளவும் பிசகாமல் நிறைவேற்றியவர். ஷைத்தானின் தூண்டுதலோ மனோ இச்சையோ அவர்களின் லட்சியத்தை தடுக்கவில்லை. அவர்கள்தான் மாபெரும் ஏகத்துவ புரட்சியாளர். அவர்கள்தான் மிகச்சிறந்த பகுத்தறிவுவாதி. அவர்கள்தான் தியாகத்தின் தடாகம்.
அந்த சத்திய சீலரின் வாழ்க்கையில் நமக்கு மிகப்பெரும் படிப்பினைகள் இருக்கிறது. அல்லாஹ் தனது திருக்குர் ஆனில் குறிப்பிடுகிறான்,
இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது, தம் சமூகத்தாரிடம் அவர்கள், "உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம், அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கைகொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி, "அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது, ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்" எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்); "எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது," (60:4)
இப்ராஹீம் நபி(அலை...) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாகவே ஹஜ்ஜின் ஒவ்வொருக்கடமைகளும் அமைந்திருக்கின்றன. நாம் தினமும் தொழுகையின்போது அத்தஹியாத்தில் அவர்களுக்கு அல்லாஹ் அருள்ச்செய்ததை நினைவுக்கூறுகிறோம். இவ்வாறு இஸ்லாமிய வாழ்வின் பல்வேறு நிலைகளில் இப்ராஹீம்(அலை...) அவர்களை நினைவுகூறும் நாம் அத்தோடு நின்றுவிடாமல் அவர்களின் தியாகத்தையும் ஒரு முன்மாதிரியாகக்கொண்டு அதற்காக தயாராகவேண்டும். நபி இப்ராஹீம்(அலை...) அவர்கள் எதிர்கொண்ட நம்ரூத் போன்றக்கொடுங்கோலர்கள் இன்றும் மோடியின் வடிவிலும் ஓல்மர்ட்டின் வடிவிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் . காலங்களும் பெயர்களும் தான் மாறுகிறதைத்தவிர கொடூரர்களின் குணங்கள் மாறவில்லை. இவர்கள் நம் முஸ்லிம் உம்மத்தை அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் ஆட்படுத்திவருகிறார்கள். இவர்களிடகிருந்து நம் முஸ்லிம் உம்மத்தை பாதுகாத்திடவும், வலுப்படுத்தவும், இஸ்லாத்தை நிலை நாட்டிவிடவும் தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் இன்றைக்கும் தேவைப்படுகிறது.
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.(9:111)
பெருநாள் கொண்டாடினோம் சிறந்த ஆடைகளை அணிந்தோம், உயர் ரக உணவை உண்டோம் என்றில்லாமல் தியாகத்தின் தாடாகம் நபி இப்ராஹீம்(அலை..) அவர்களின் தியாகத்தை முன் மாதிரியாகக்கொண்டு அந்த தாடாகத்திலிருந்து கிளம்பும் ஊற்றுக்களாக மாறுவோம்.
இன்ஷா அல்லாஹ்... 'தகப்பலல்லாஹ் மின்னா வ மின்கும்'

திங்கள், 8 நவம்பர், 2010

ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு.


ஐதராபாத்,நவ.7:நாடு தழுவிய அளவில், வரும் 10ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதுக்குறித்து, ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திற்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு அரசு தவறான தகவல்களை பரப்பி வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை செய்கிறது.

அஜ்மீரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான குற்றப் பத்திரிகையில், எங்களது இயக்கத் தலைவர் தேவேந்திர குப்தாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் எங்களது இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது அடிப்படை ஆதாரம் இல்லாம் குற்றம்சாட்டும் போக்கு தொடர்கிறது. இதை கண்டிக்கும் வகையில், வரும் 10ம் தேதி நாடு தழுவிய அளவில் தர்ணா போராட்டம் நடத்துகிறோம்.
அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடக்கும்." இவ்வாறு ராம் மாதவ் கூறினார்.

ஈராக் மீது போர் தொடுத்தது தவறு புஷ் வருத்தம்.நியூயார்க்,நவ.6:ஈராக் மீது போர் தொடுத்தது தவறு என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்.புஷ், 'டெசிஷன் பாய்ண்ட்ஸ்' என்ற பெயரில் தன்னுடைய சுயசரிதையை புத்தகமாக எழுதி இருக்கிறார். இப்புத்தகம் அடுத்தவாரம் வெளிவர உள்ளது. இதில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.அதில் ஈராக் மீதான போர் குறித்தும் எழுதியுள்ளார். அந்நாட்டின் மீது போர் தொடுத்தது, நான் செய்த தவறு என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்

சுவிற்சலாந்தில் குர்ஆன், பைபிள் ஆகியவற்றை எரிக்க சதி: ஹிந்து தீவிரவாதிகள் கைது.சுவிற்சலாந்தில் வாழும் இந்தியர்களான பாசிச இந்து தீவிரவாதிகள் மூவர் தீபாவளி தினமான இன்று வெள்ளிக்கிழமை இரவு புனித நூல்களான குர்ஆன், பைபிள் ஆகியவற்றை பகிரங்கமாக எரித்து சாம்பலாக்குகின்றமைக்கு திட்டமிட்டு இருந்தனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பொலிஸார் இம்மூவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்கினர்.இவர்கள் ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இன் உறுபினர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பல்வேறு பெயர்களில் வெளிநாடுகளில் செயல்பட்டு வருவது குறிப்பிட தக்கது.

இவர் கடந்த எட்டு வருடங்களாக சுவிற்சலாந்தில் வசித்து வருகின்றார். இவர் நீதிமன்றில் சாட்சியம் வழங்குகையில் குர் ஆன், பைபிள் இரண்டும் தீய சக்திகளின் இரு கண்கள் மாதிரி, இந்நூல்களை குழந்தைகள் படிக்கின்றமையைகூட அவர்கள் விரும்பவில்லை என்று கூறி இருக்கின்றார். இவர்கள் குற்றவாளியாக கருதப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை!

- அனைத்து முஸ்லிம்களின் கவனத்திற்கு பல போராட்டங்களின் மத்தியில் பெறப்பட்ட அரசு பணியில் 3.5 சதவிகிதம் இட ஒதிக்கீட்டில் முஸ்லிம்களின் கோட்டா  நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. - *படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய சொல்லவும்**. **உங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கும் தெரியபடுத்தவும்**.*

(பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ் மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுந்துங்கள்)

 - அல்லாஹ் நாம் அனைவர் மீதும் அருள்புரிவானாக!

 அனைவருக்கும் பயனுள்ளத் தகவல்

  உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு பயனளிக்கலாம்.